November 18, 2025
உயர்தரப் பரீட்சை 2025: இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை 2025: இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!

Nov 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து தனியார் வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் மீது இன்று (3) நள்ளிரவு முதல் தடை அமுலாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில், மொத்தம் 340,525 மாணவர்கள் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *