இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியது.
எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. நேற்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன.
சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.