இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அவற்றின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க சூரியசக்தி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு QR குறியீடு முறை மூலம் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு தேசிய மின் கட்டமைப்பைப் பயன்படுத்தக் கூடாது எனவும் குளிரூட்டிகளை பிற்பகல் 3 மணிக்கு அணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் தேவையற்ற பயணங்களைக் குறைக்க அரசு அலுவலகங்களில் இணையவழிப் பணி (Zoom/Google Meet) முறையை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here