December 13, 2025
எரி காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

எரி காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்..!

Apr 26, 2024

முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *