ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 முறை நடைபெற்றிருந்தது.
17 வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடக்க இருக்கின்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான அவர் கடந்த வருடமே ஐ.பி.எல். போட்டியில் அறிமுகம் ஆனார்.
இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்து 3 ஆட்டங்களில் மட்டுமே களமிறக்கியிருந்தது.
இந்நிலையில், ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2 ஆவது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார்.