February 9, 2026
கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!

Feb 14, 2024

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில் புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில், அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *