விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்றைய தினம்(28.06) கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின.
இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் அணிகள் பங்குபற்றுதலுடன், இன்று நாளையும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமால் பெர்னாண்டோ, இரணைமடு விமானப்படை அதிகாரி கிளிநொச்சி முல்லைத்தீவு பொலிஸ் மா அதிபர் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், போட்டியாளர்கள், மற்றும் பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.