கொழும்பின் பல பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு அங்கமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மேலும் நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here