அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன.
ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்படுகிறது.
இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது இப்படம் ட்ராப் என ஷாக்கிங் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அல்லு அர்ஜுன் படத்திற்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம் அட்லீ.
அதை தயாரிப்பு நிறுவனம் தரமறுத்ததால் இப்படம் ட்ராப் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.