விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 26 அல்லது ஜூலை 3-ல் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ‘ஜனநாயகன்’ படக்குழு டெல்லியில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜூன் 19-க்குள் சான்றிதழ் கிடைக்குமானால், ஜூன் 26-ம் திகதி படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த திகதியிலும் தாமதம் ஏற்பட்டால், அதிகபட்சமாக ஜூலை 3-க்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விஜய்யின் அரசியல் மற்றும் திரை பயணத்தை ஒருங்கிணைக்கும் முக்கிய படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








