ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர் இந்த வீடியோவை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த குழந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.