கொழும்பு நுகேகொட மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம்(08) 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் ஆகியோரின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார் குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டபோது வீட்டின் படுக்கையில் முதியவரின் சடலமும் வீட்டின் சமையலறையில் ஆடைகளற்ற நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது இதுவரை தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.