எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவாக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இன்று (17.08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் சஜித்துடன் இணைந்துள்ளார்.