பேலியகொடை மீன் வர்த்தக வளாகத்தை உலகிற்கு முன்மாதிரியான வர்த்தக நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
காலி மீன்பிடி துறைமுகத்தில் புதிய மீன் ஏல விற்பனை கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் மிகப்பெரிய மொத்த மீன் வர்த்தக மத்திய நிலையமான பேலியகொடை வளாகத்தில் தற்போது உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து அவற்றை விரைவாக நிவர்த்தி செய்ய ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டில் பல மீன்பிடி துறைமுகங்கள் அசுத்தமான இடங்களாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.








