நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகள் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
மேலும் இப் பொருட்கள் நேற்றைய தினம் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 4கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.