இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்றோல் லீற்றர் 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

அதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சைனோபெக் ஆகியனவும் தமது எரிபொருட்களில் விலைகளை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here