புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிங்கிரிய, முகலந்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் விலத்தவ பிரதேசத்தில் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்துள்ளதாக கொலை செய்யப்பட்டவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்ட்ட விசாரணையில், பிங்கிரிய, வீரபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.