பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் குறித்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்களின் குறித்த இதுவரை எதுவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here