சென்னையில் மிக்ஜம் சூறாவளி பாதிப்பு மற்றும் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள், தண்டவாளங்கள், விமான நிலையம் என சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், விமானங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விமான சேவைகள் தமதமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புனேயிலிருந்து சென்னை வந்து சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகியதுடன், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதித்தே புறப்பட்டன.
மோசமான காலநிலையினால் அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்ததால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி, ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
நேற்றைய தினம் நான்கு மணிநேரத்தில், சராசரியாக 6.7 செ.மீற்றரளவுக்கு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.