இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நாளை(21) நடைபெறவுள்ள நிலையில், வலைதளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள TikTok, இந்நாட்டின் தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களை கையாள்வதற்காக IFCN அங்கீகாரம் பெற்ற தகவல் சரிபார்ப்பு நிறுவனமான Newschecker உடன் இணைந்து செயல்படுகின்றது.
இதன் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அடையாளம் காண்பதற்கும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், மக்களுடன் முக்கியமான விடயங்கள் குறித்த சரியான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மேலும், Newschecker மூலமாக TikTok சமூக வழிகாட்டுதல்களைப் பாதுகாப்பதற்கு உதவும் முக்கியமான தகவல்களும் வழங்கப்படுகின்றன. தனது பயனர்களின் அறிவை மேம்படுத்துவதற்கும், தொடர்ச்சியை பராமரிப்பதற்கும் அதிக பங்களிப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட உத்திகளுடன் புத்தாக்க தயாரிப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள TikTok, தேர்தல் பற்றிய மும்மொழிகளிலும் உத்தியோர்பூர்வ தகவல்களை வழங்குவதற்கான மத்திய நிலையத்தை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.