நாட்டின் பல சந்தைகளில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டை விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியால் கடந்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் உள்நாட்டு சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராமின் சராசரி சில்லறை விலை கடந்த நவம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 527.60 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், அது நவம்பர் 20 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 675 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒரு வாரத்தில் சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராமின் சராசரி சில்லறை விலை 147.40 ரூபாவால் அதாவது சுமார் 27.9% ஆல் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், புறக்கோட்டை சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலையும் குறித்த காலப்பகுதியில் 37.68 ரூபாயிலிருந்து 41.75 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு வாரத்தில் முட்டை ஒன்றின் விலை 4.07 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், இது சுமார் 10.8% அதிகரிப்பாகும்.

இதற்கிடையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலும் உள்நாட்டு சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராமின் சராசரி சில்லறை விலை 700 ரூபாவிலிருந்து 820 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது ஒரு வாரத்தில் 120 ரூபாய் அதாவது 17.1% அதிகரிப்பாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 39.60 ரூபாவிலிருந்து 42 ரூபாவாக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here