தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையே சுற்றுலா நடவடிக்கைகளை இலகுபடுத்துதல் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள நட்புறவு மற்றும் நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு விசேட மைல்கல் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் (Facebook) சமூக ஊடகம் வாயிலாக பதிவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோவ் உடனான இருதரப்பு கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மத உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் பிரதிபலிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இதன் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here