Tamil News Channel

ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானம்..!

02main

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக,ஐக்கிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் நாட்டை பொறுப்பெடுத்து பொருளாதரத்தை சீர்செய்ய எவரும் முன்வராத போது, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தனி மனிதனாக நின்று நாட்டை பொறுப்பெடுத்தார்.

இவ்வாறு எமது நாட்டை பொறுப்பெடுத்து, சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீர்செய்ய முடியுமென்பதை பாமர மனிதன் தொடக்கம் படித்தவர்வரை விளங்கி வைத்துள்ளனர்.

மேலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பின்னர், நாட்டில் எந்த இனங்களுக்கு இடையிலும் இனப் பிரச்சினை ஏற்படாமல் சமத்துவமாக நாட்டைக் கொண்டு செல்கின்றமையையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.

எனவே இந்த வருடம் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வித நிபந்தனையுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க எமது கட்சி தீர்மானித்துள்ளது.

எமது கட்சியுடன் உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும் போது, ஏனைய அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான சிறந்த முடிவுகளை எமது கட்சி எடுக்குmena ஐக்கிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts