ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக எவரிடமும் தெரிவிக்கவில்லை என நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
’’அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்தவுள்ளதாவே தான் கூறியதாகவும் , மேலும் ஊடகவியலாளர் ஒருவர், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால்! உங்களது நிலைப்பாடு என்னவென்று வினவினர். அவ்வாறு வினவியமைக்கே, நான் அனைத்துக் கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால், நான் அதைச் செயற்படுத்துவேனெனக் கூறினேன்.அதை எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கவில்லை, அதை ஊடகவியலாளர்களே கேட்டதுடன், அவர்களே செய்தியாக பிரசுரித்துள்ளனர்” என்றும் தெரிவித்தார்.