டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி, ஹோல்புரூக், திஸ்பன சந்தி வழியாக மெராயா ஊடாக நுவரெலியாவுக்கும், நாகசேனை, மற்றும் லிந்துலை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கும் தனியார் போக்குவரத்துச்சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அதேநேரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.