சீனாவுடனான உறவானது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
தாய்வானானது சீனாவுடன் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது என்று சீனத் தலைவர் தெரிவித்துள்ள பின்புலத்தில் தாய்வான் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. சீனாவுடனான உறவுகளைப் பேணுவதற்கு ஜனநாயகக் கொள்கை மிக முக்கியமானது. அதனால் எமது மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சீனா தாய்வானின் தேர்தல் முடிவுகளை மதிக்க வேண்டும். எமது நீரிணை பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணும் பொறுப்பு இரு தரப்புக்கும் உள்ளது.
எமது மக்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் எங்களுக்கு அமைதியுடன் கன்னியமும் வேண்டும்.
எமது நிறுவனங்கள் உலகளாவிய மற்றும் பல்வகைமை கொண்ட நிறுவனங்களாக நோக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.