ஸ்ரீபுர கெமுனுபுர புள்ளையர் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீபுரா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.