தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார் .

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நேற்று (10-10-2024) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மற்றும்  மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலே நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

இது தொடர்பில் அவரது குறித்த  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள் கடந்த 75 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி அமைப்புக்கு மாறாக கிராமிய மட்டத்திலிருந்து ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு  செய்யப்பட்டிருக்கின்றார்.

அதே போல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாராளுமன்ற உறுப்பினர்களை  மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here