சூறாவளி அல்லது சுனாமி அடித்தாலே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமென்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 18 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவும் நடைபெற இருக்கின்றன.
அந்தத் தெரிவில் போட்டி இருக்குமா?, இல்லையா?என்பது குறித்து எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாகத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவு நடக்கும். இவை நடைபெறும் வாய்ப்புக்கள் 90 வீதம் இருக்கின்றன. என்று குறிப்பிட்டார்.