Tamil News Channel

நபர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை !

car

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்  இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இவர்  பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப்பகுதியை கடந்து பயணித்துள்ளதை அப்பகுதியில் இருந்த சி.சி.ரி.வி காணொளி மூலம் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் குறித்த வாகனம் மொராவெவ பகுதிக்கு வராத நிலையில் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள்.

இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் இவருடைய  சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இவருடைய உறவினர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *