இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இந்த ஆண்டில் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென ரணில் விக்ரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் சிலரும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாகவே, அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.