February 9, 2026
நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!
News News Line Top Updates புதிய செய்திகள் வர்த்தகம்

நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!

Jan 29, 2024

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது.

எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகளே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் இன்றையதினம் (29) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், கரட் 1350/=, சீமை தக்காளி 800/=, சிவப்பு சலாது 1800/=, குடைமிளகாய் சிவப்பு 1900/=, குடைமிளகாய் மஞ்சள் 1900/=, குடைமிளகாய் பச்சை 1300/=, சிவப்பு கோவா 3700/=, லீக்ஸ் 460/=, கோவா 520/=, இலையுடன் பீட்ரூட் 470/=, இலை அகற்றிய பீட்ரூட் 570/=, உருளைகிழங்கு 320/=, சிவப்பு உருளைகிழங்கு 340/=, என மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *