முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞனை நேற்றைய தினம் (28) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28) பட்டத்திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை அவதானித்தாக கூறி முல்லைத்தீவு காவல்துறையினர் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here