இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
JN.1 கோவிட்டானது, ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாககும்
இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை JN.1 கோவிட் வைரசின் அறிகுறிகளாகும்.
இவ்வகை கொவிட் வைரஸானது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.
இதனால் வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் பூஸ்டர்களைப் பெற வேண்டும் எனவும் இந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.