Thursday, March 12, 2026

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு

Must Read

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை நாளை (21) முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன.

அதன்படி சதொச கடைகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாறான சூழலில், சந்தையில் நாட்டு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சந்தையில் கடந்த சில நாட்களாக முட்டை ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், சந்தையில் உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights