December 13, 2025
நிரம்பி வழியும் சிறைச்சாலை வைத்தியசாலை..!
News News Line Top Updates புதிய செய்திகள்

நிரம்பி வழியும் சிறைச்சாலை வைத்தியசாலை..!

Feb 10, 2024

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் முப்பது சிறைகள் உள்ளன, ஒவ்வொரு சிறைக்கும் தனி வைத்தியசாலை உள்ளது. அவற்றுள் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை வைத்தியசாலையில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்த சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *