புத்தளம் – மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று(09) காலை பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபரரை வேகமாக வந்த கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன் போது வேகன்ஆர் ரக கார் ஒன்று அதிவேகமாக வருவதைக் கண்ட தந்தை உடனடியாக, மகனைக் கையால் தள்ளி காப்பாற்றியுள்ளதுடன் அதேநேரம் குறித்த தந்தை அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, ​​கார் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும் மகன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், தந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகன் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தந்தையின் செய்கையால் மகனின் உயிர் நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்டதாகவும் இல்லையெனில் இருவரும் உயிரிழக்க நேரிடும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்திற்க்கு காரணம் கார் சாரதி தூங்கியதால் இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here