நுவரெலியா – தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய தோட்ட வீடமைப்பு திட்டத்தின் அருகில் உள்ள காட்டில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 ஏக்கர் வரை தீயில் கருகி நாசமாகியிருப்பதாகவும் பிரதேச வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அங்குவாழும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் அருகில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மித்த பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.