November 17, 2025
நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்பு விழா!
புதிய செய்திகள்

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்பு விழா!

Jun 21, 2024

நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவு கேடயங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் நெல்லியடி பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *