Tamil News Channel

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் கெய்ண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(25) நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய மிதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

குஜராத் அணி சார்பாக தனுஜா கன்வர் (Tanuja Kanwar) 28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் அமெலியா கெர் (Amelia Kerr) 4 விக்கட்டுக்களையும் ஷப்னிம் இஸ்மாயில் (Shabnim Ismail) 3 விக்கட்டுக்களையும் மும்பை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை 18.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

மும்பை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

குஜராத் அணிக்கு தனுஜா கன்வர் (Tanuja Kanwar) 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் ஆட்டநாயகியாக மும்பை வீராங்கனை அமெலியா கெர் (Amelia Kerr) தெரிவாகியிருந்தார்.

இன்றைய போட்டியில் யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts