பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இன்று சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08) நாட்டிலிருந்து புறப்பட்டார்.
அந்த விஜயத்தின் போது இன்று (10) இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.