கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
நேற்று தினம் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவுஸ்திரேலியா தனது முதலாவது இன்னிங்ஸில் 487 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 271 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
216 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 233 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இதற்கமைய 450 என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 89 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக மிட்சல் மார்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இப்போட்டியில் நாதன் லியோன் பெற்ற 5 விக்கட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் 500 விக்கட்டுக்களுக்கு மேல் பெற்ற 8 ஆவது வீரராகவும் 4 ஆவது அவுஸ்திரேலிய வீரராகவும் பதிவாகியுள்ளார்.
தொடரின் அடுத்த போட்டி எதிர் வரும் 26 ஆம் திகதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரை 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.