December 9, 2025
பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை

Jan 20, 2024

முன்னாள் பா.ஜ.க கட்சி உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்துள்ளார்.

காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க வில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததன் காரணமாக பா.ஜ.க மாநில தலைமையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து தான் பா.ஜ.க கட்சியிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காயத்ரி ரகுராம் அறிவித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் நேற்று அ.தி.மு.க வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *