கலவான மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார்.

இதன்போது அருகில் இருந்த ஒன்றரை அடி கொங்கிரீட் கல் அவரது கன்னத்தில் பலமாக மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த காரணத்தினால், மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here