பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 29 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் இந்த சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் என கைதான நபர் 39 வயதுடையவர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








