ஏ9 வீதியில் அநுராதபுரம் இகிரிகொல்லாவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வயலிற்குள் கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான பௌசரில் இருந்த எரிபொருளை மற்றுமொரு பௌசருக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







