சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
நேற்றைய தினம் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அமைச்சு ஊழியர்களுக்கு இந் நிதியுதவியை வழங்கி வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி குணரத்னவின் எண்ணக்கருவின் அடிப்படையில், இந்நிதியுதவி அமைச்சு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.