காத்தான்குடி  பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் (30) உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருபவராவார்.

இவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடிவிறாந்தும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 14 வயது 7 மாதம் கொண்ட சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக தெரிவித்து சிறுமியை கடந்த மாதம் 10 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும்  14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here