Tamil News Channel

பாவனைக்கு வந்த புதிய கரன்சி நோட்டுகள்!!!

பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் மக்கள் பாவனைக்கு வந்துள்ளது. மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களையே இவ்வாறு இங்கிலாந்து வங்கி  வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரிட்டனில் மூன்றாம் மன்னர் சார்லஸ் பாங்க் ஆப்பிற்கு இங்கிலாந்து பிரதிநிதிகளால் அவரது உருவப்படம் கொண்ட முதல் செட் கரன்சி நோட்டுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக இங்கிலாந்து வங்கி தெரிவிக்கையில்,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் கொண்ட நோட்டுகளுக்கு பதிலாகவும் அல்லது பண பயன்பாடு குறைந்து வரும் நேரத்தில் தேவை அதிகரிப்பதற்காக மட்டுமே புதிய நோட்டுக்கள் அச்சிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய நோட்டுகளுடன் இணைந்து இரண்டாம் எலிசபெத் மகாராணி உருவப்படம் அச்சிடப்பட்ட நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகளில் அவை கிடைக்கும் என்றும் இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts