பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று(04) கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் மற்றும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் 20 பேர் தப்பியோடியுள்ளமை குறிப்பிடதக்கது.
அத்துடன் நேற்று காலை கைதிகள் சோமாவதி புனித யாத்திரைக்காக வந்த பேருந்தை கடத்த முற்பட்டதுடன்,
வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணம் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த குற்ற செயலினை புரிந்த கைதிகள் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் மோதல்களில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.